சம்பவம் செய்தி

தமிழ்நாடு

2 வயது பெண் குழந்தையை தரையில் அடித்து கொன்ற தொழிலாளி கைது

Added : மே 23, 2020
Share
Advertisement

வேலூர்: கே.வி. குப்பம் அருகே, இரண்டு வயது பெண் குழந்தையை, தரையில் அடித்து கொன்ற கட்டட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி அடுத்த வள்ளலாரை சேர்ந்தவர் லட்சுமணன், 65; அவர் மனைவி சாந்தி, 50. மகள் லாவண்யா, 20. இவர், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பாய்ச்சலை சேர்ந்த, கார் டிரைவர் சிவசக்திவேல், 21, என்பவரை, 2018ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, கலைரஞ்சனி என்ற இரண்டு வயது மகள் இருந்தார். தினமும் குடித்து விட்டு வந்ததால், சிவசக்திவேலுவை விட்டு லாவண்யா பிரிந்து, வேலூர் மாவட்டம், கே.வி. குப்பத்தில் மகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி பிரவீன்குமாருக்கும், 21, கள்ளக்காதல் ஏற்பட்டது. அப்போது, முதல் திருமணத்தை மறைத்த லாவண்யா, கலைரஞ்சனியை தன் உறவினர் வீட்டு குழந்தை, ஏழையாக இருப்பதால் தான் வளர்ப்பதாக கூறியுள்ளார். கடந்த பிப்., 5ல், ஒலக்காசியில் உள்ள அம்மன் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த, 17ல் கலைரஞ்சனி இறந்து கிடந்தார். லாவண்யா கொடுத்த புகார்படி, கே.வி. குப்பம் போலீசார் விசாரித்து, பிரவீன்குமாரை நேற்று கைது செய்தனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த, 17 இரவு, 9:00 மணிக்கு பிரவீன்குமார், அவர் தந்தை வெங்கடேசன், 58, ஆகியோர் குடிபோதையில் இருந்தனர். அப்போது, கலைரஞ்சனியை, பிரவீன்குமார் கொஞ்சி கொண்டிருந்தார். அதை பார்த்த வெங்கடேசன், யாரோ பெற்ற குழந்தையை கொஞ்சி கொண்டிருக்கின்றாயே என கோபமாக கேட்டுள்ளார். இதனால் பிரவீன்குமார், யார் பெற்ற குழந்தை என லாவண்யாவிடம் கேட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி, முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என்ற ரகசியத்தை போட்டு உடைத்தார். இதை ஏன் என்னிடம் முன்பே சொல்லாமல் மறைத்தாய் என கேட்டு, குழந்தையை தரையில் அடித்து கொலை செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X