திருப்பத்தூர்: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலைக்கு, முக்கிய காரணமான தனுவை, வீரமங்கை என, 'வாட்ஸ் ஆப்'பில் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில், 1991 மே, 21ல் மனித வெடிகுண்டு தாக்குதலால் கொலை செய்யப்பட்டார். ஆண்டுதோறும், அன்றைய தினம் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் கண்ணன், 55. இவர் மகன் பிரபாகரன், 29; கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வாட்ஸ் ஆப்பில், ராஜிவ் கொலைக்கு முக்கிய காரணமாக, தனுவை வீரமங்கை என பதிவு செய்துள்ளார். அதில், வீர வணக்கம், தமிழின பகை முடித்த வீரமங்கை தனு, என, குறிப்பிடப்பட்டிருந்தது. வாட்ஸ் ஆப்பில், வைரலாக பரவிய இந்த பதிவு குறித்து போலீசாருக்கு புகார்கள் சென்றன. ஆம்பூர் போலீசார் விசாரித்து, பிரபாகரனை நேற்று கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE