புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தனியார் வங்கி நகை மதிப்பீட்டாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், வங்கி மூடப்பட்டது. புதுக்கோட்டை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணிபுரியும் நகை மதிப்பீட்டாளர் ஒருவருக்கு, கொரோனா அறிகுறி இருந்தது. இதையடுத்து அவரும், அவரது மனைவியும், புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கும், அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நகை மதிப்பீட்டாளர் வேலை பார்த்த, புதுக்கோட்டை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இருக்கும் வணிக வளாகம் மற்றும் வங்கி முழுவதும் கிருமிநாசினி அடிக்கப்பட்டது. மேலும் அந்த கட்டடத்துக்கு யாரும் செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டது. தொடர்ந்து, வங்கி வரும், 26ம் தேதி வரை மூடப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டது. நகை மதிப்பீட்டாளர், அவரது மனைவி தவிர, பூனாவில் இருந்து புதுக்கோட்டை வந்த ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE