பொது செய்தி

இந்தியா

அன்பின் அழகான சாதனை: இவாங்கா டிரம்ப் பாராட்டு

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
Ivanka Trump, Bihar Girl, coronavirus, coronavirus outbreak, இவாங்கா, டிரம்ப், பீகார், பீஹார், சைக்கிள், பயணம், பாராட்டு

பாட்னா: காயமடைந்த தந்தையை 1200 கி.மீ., சைக்களில் அழைத்து வந்த 15 வயது சிறுமியை, அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளான இவாங்கா டிரம்ப் பாராட்டியுள்ளார்.

பீஹார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தை சேர்ந்த, மோகன் பஸ்வான். டில்லி அருகேயுள்ள கூர்கானில் இ-ரிக் ஷா ஓட்டி வருகிறார். அவரது மனைவி, தர்பங்காவில் அங்கன்வாடி ஊழியராக உள்ளார். அவர்களுக்கு ஜோதி(15) மற்றும் 4 வயதில் மகன் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் டில்லியில் மோகன் சாலை விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டதால் தந்தையை பார்க்க, ஜோதி வந்துள்ளார். ஆனால், அதற்குள் ஊரடங்கு அமலானதால், தந்தையுடனேயே ஜோதி தங்கியுள்ளார். அதேநேரத்தில் வீட்டு உரிமையாளர், அவர்களை காலி செய்யும்படி வற்புறுத்தியுள்ளார். இதனால், சைக்கிள் மூலம் ஊர் திரும்ப முடிவு செய்தார்.

இதற்காக தெரிந்தவர்களிடம் பணம் கடனாக வாங்கி, சைக்கிள் ஒன்றை வாங்கிய ஜோதி, தந்தையை அழைத்து கொண்டு சொந்த ஊருக்கு கிளம்பினார். ஜோதி சைக்கிள் ஓட்ட, பின்னால் மோகன் அமர்ந்து கொண்டார். எட்டாவது நாளில் குர்கானில் இருந்து 1,200 கி.மீ., தூரத்தில் உள்ள சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்.
சைக்கிளில் சொந்த ஊர் திரும்பிய ஜோதியின் கதை கேட்டதும், அப்பகுதியை சேர்ந்த ராணுவ வீரர்கள், சிறுமியை பாராட்டி 5 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசாக வழங்கியுள்ளனர். ஊரடங்கு முடிந்த பின்னர் ஜோதிக்கு உதவுவதாகவும், 9ம் வகுப்பில் படிக்க வைக்கவும் மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.


latest tamil news


ஜோதி குமாரி தனது தந்தையை சைக்கிளில் அமரவைத்து பயணிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். இதைப்பார்த்த இந்திய சைக்கிள் பந்தைய கூட்டமைப்பு, ஊரடங்கு முடிந்தவுடன் தங்களின் சொந்த செலவில் ஜோதி குமாரியை டில்லிக்கு அழைத்து பயிற்சி அளிக்க முடிவு செய்து அறிவித்துள்ளது.
இந்த செய்தியைப் பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்பின் மகளும், ஆலோசகருமான இவாங்கா டிரம்ப், பாராட்டு தெரிவித்துள்ளார். ஜோதி குமாரியின் புகைப்படத்தை பகிர்ந்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: 15 வயது ஜோதி குமாரி தனது காயமடைந்த தந்தையை சைக்கிளில் அமரவைத்து 1,200 கி.மீ தொலைவை 7 நாட்களில் கடந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். அன்பும், துன்பத்தை தாங்கும் மனோதிடம் கொண்ட அழகான சாதனை, இந்திய மக்களையும், சைக்கிள் பந்தய கூட்டமைப்பையும் கவர்ந்துள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-மே-202004:19:44 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் ரஜினி தன்னோட கால் சுண்டுவிரலால் சைக்கிளை மிதித்து மூணு மணிநேரத்தில் இந்த தூரத்தை கடந்திருப்பார்.. மோடி மூணு நிமிஷம் மூச்சை பிடிச்சு ஒரே ஜம்ப்பில் இதை செய்திருப்பார். மீடியாக்கள் தேவையில்லாமல் இந்த பெண்ணை பாராட்டுகிறார்கள். இவளுக்கு டீ போட தெரியுமா?
Rate this:
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
26-மே-202011:50:41 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyansambantam illamal ..message poda vendam .....
Rate this:
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
23-மே-202021:14:44 IST Report Abuse
Enrum anbudan நமது மக்களின் குடும்ப அன்பும் , உழைக்கும் திறனும் , இயற்கையிலேயே அமைந்த கடின உழைப்பின் மஹோன்னதமும் இதை காணும்பொழுது மெய்சிலிர்க்கின்றது . இவ்வாறான செயல் சிலரின் திறமையை வெளிஉலகிற்கு தெரியப்படுத்துகின்றது ஆனால் மனதின் ஓரத்தில் சிறு வலி வருகின்றது இதைபோல் கஷ்டம் நமது மக்கள் இன்னும் படுகின்றார்களே என்று . ஒவ்வொரு அரசியல் வாதியும் மற்றவரை குறைகூற இந்த ஏழை மக்களை இவ்வாறான செயல்பாடுகளுக்கு ஊக்குவிக்கின்றார்கள் என்று தெளிவாக புரிகின்றது. மாற்றம் வரவேண்டும் இந்த மாதிரியான அரசியல் வாதிகள் ஒழிய இன்னொரு கொடிய வைரஸ் வரவேண்டும் அது அரசியல்வாதிகளுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் மட்டுமே.
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
23-மே-202019:05:09 IST Report Abuse
Nallavan Nallavan இந்திய நிகழ்வுகளை இவர் கவனிக்கிறார் என்று சில சம்பவங்கள் குறித்து இவர் கருத்துக் கூறியதில் இருந்து தெரிய வருகிறது .........
Rate this:
தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா
26-மே-202002:41:05 IST Report Abuse
தமிழ் வேந்தன்maraimukamaaka kaari thuppukiraar endrum therikirathu...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X