அரசு பேருந்தை திருடி ஊர் திரும்ப முயன்ற வாலிபர் கைது

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Andhra pradesh, APSRTC, trending news,
, ஆந்திரா, அரசு, பேருந்து, திருட்டு, கைது

பெங்களூரு: ஊரடங்கிற்கு முன் பெங்களூருவில் இருந்து ஆந்திரா வந்தவர் ஊர் திரும்ப முடியாததால் அரசு பேருந்தை திருடிச் சென்று பிடிப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூர் விஜயபுராவை சேர்ந்தவர் முசாமில் கான் என்ற இளைஞர். ஊரடங்குக்கு முன்பு ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருக்கிறார். நீண்ட நாட்களாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்த அவர், நேற்று நடந்தே ஊருக்கு திரும்பி செல்லலாம் என முடிவு செய்து, அனந்தபுரத்தில் இருந்து தர்மவரம் வரை நடந்து வந்துள்ளார். அங்குள்ள பணிமலையில் பேருந்து ஒன்று சாவியுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்ட அவர், சட்டென யோசித்து பேருந்தை திருடிக் கொண்டு பெங்களூரு செல்ல முடிவெடுத்தார்.


latest tamil news


பேருந்தை மர்ம நபர் ஒருவர் திருடி செல்வதை பார்த்த பணிமனை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அனந்தபுரத்தில் உள்ள தனியார் கார் தொழிற்சாலை அருகே வந்த பேருந்தை தடுத்து நிறுத்தி, பேருந்தை கடத்தி வந்த முசாமில் கானை கைது செய்தனர். சொந்த ஊர் செல்ல நினைத்தவர் தற்போது சிறை சென்றுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
23-மே-202023:17:45 IST Report Abuse
Vena Suna பஸ்சை ஓட்டறது அவ்வளவு ஈஸியா? ஹிஹிஹி
Rate this:
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-மே-202018:25:25 IST Report Abuse
தமிழ்வேல் இப்போ மூனு வேளை சோறும் கியாரண்டி..
Rate this:
Cancel
Balasubramanian - Bangalore,இந்தியா
23-மே-202013:45:43 IST Report Abuse
Balasubramanian அரசு பேருந்தை திருடினால், எவரும் நடுவில் நிறுத்தி விசாரிக்க மாட்டார்கள் என்று, எவ்வளவு லாஜிக்கலாக யோசித்து இருக்கிறார் பாருங்கள் என்ன, நடுவில் சிலரை ஏற்றி சென்றிருந்தால் விருதே கிடைத்தது இருக்கும் இப்பொழுது அவ்வளவு முயற்சியும் வீண்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X