பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.5.5 கோடியில் வங்கி கடன்

Added : மே 23, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த கடன் வழங்கும் நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, 5.5 கோடி ரூபாய் வங்கிக் கடனை, அமைச்சர் அன்பழகன் வழங்கினார்.
இதில் அவர் பேசியதாவது: தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், தர்மபுரியில் உள்ள, 94 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், காரிமங்கலத்தில் உள்ள, 98 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கும், ஐந்து கோடியே, ஐந்து லட்சத்து, 10 ரூபாய் மதிப்பில் சிறப்பு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால், தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை காக்கும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு, 1,000 ரூபாய் வழங்கப்பட்டது. இரண்டு மாதங்களாக அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, விலையில்லாமல் வழங்கி வருகிறது. மேலும், கொரோனா தடுப்பு பணியில், மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, பொதுமக்கள் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட செயல்களை சிறப்பாக ஒத்துழைப்பு தந்துள்ளதால், தர்மபுரி, தற்போது பச்சை மண்டலத்துக்கு மாறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X