பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவில் இருந்து மீண்ட இருவர்: இதுவரை 21 பேர் 'டிஸ்சார்ஜ்'

Added : மே 23, 2020
Share
Advertisement

ஓசூர்: கொரோனாவில் இருந்து மீண்ட இருவர், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை, 21 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்த, 11 பெண்கள், ஐந்து ஆண்கள், 11 வயது சிறுவன், 14 வயது சிறுமி மற்றும் அரசு ஆம்புலன்ஸ் டிரைவர் என மொத்தம், 19 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். அதேபோல், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து திரும்பிய, சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த கொளத்தூர் பகுதியை சேர்ந்த, 34 வயது ஆண் மற்றும் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த திருவிளையார்பட்டி பகுதியை சேர்ந்த, 33 வயது வாலிபருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, 21 ஆக இருந்தது. இதில், சூளகிரி காமராஜ் நகரை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் குறித்த விபரம் மட்டும், சென்னை கொரோனா பட்டியலுடன் சேர்க்கப்பட்டு, மாவட்டத்தில், 20 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டதாக சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட, 21 பேரும் ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கடந்த, 18ல், ஆம்புலன்ஸ் டிரைவர் உட்பட, 19 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மஹாராஷ்டிராவில் இருந்து வந்த தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களும் குணமடைந்ததால், நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம், 21 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X