பொது செய்தி

தமிழ்நாடு

கழிவுநீர் கலப்பதால் பச்சை நிறமாக மாறிய தேவசமுத்திரம் ஏரி

Added : மே 23, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: சாக்கடை கழிவுநீர் நேரடியாக கலப்பதால், தேவசமுத்திரம் ஏரி தண்ணீர் பச்சைநிறமாக மாறியுள்ளது.
கிருஷ்ணகிரி தேவசமுத்திரம் ஏரிக்கு, அருகில் உள்ள மலைப்பகுதியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியை சுற்றி, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து வந்தனர். ஆனால், கிருஷ்ணகிரி நகரில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர் நேரடியாக கலப்பதால், ஏரி நாளடைவில் மாசடைந்து தற்போது தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ளது. தண்ணீர் மாசடைந்ததால், ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. கடந்த பத்து ஆண்டிற்கும் மேலாக, ஏரியை சுற்றிலும் விவசாயம் செய்வது மிகவும் குறைந்துள்ளது. ஏரி தண்ணீர் பச்சை நிறமாக மாறியுள்ளதால், ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில் தண்ணீர் கறுப்பாக மாறியதோடு துர்நாற்றமும் வீசுகிறது. நகரில் இருந்து வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீரை நேரடியாக ஏரியில் விடாமல், பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம், சுத்திகரிக்கப்பட்டு பின்னர் ஏரியில் விட வேண்டும். ஆனால் ஏரியில் நேரடியாக கழிவுநீர் கலந்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு, மக்களின் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X