பொது செய்தி

தமிழ்நாடு

பரவலாக பெய்த மழை: கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: பரவலான மழையால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், நேற்று அணை நீர்மட்டம், 40.67 அடியாக உள்ளது. கடந்த மூன்று நாட்களாக அணைக்கு வந்து கொண்டிருந்த, 400 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கடந்த, 20 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம், 40 கன அடிநீர் வந்த நிலையில் நேற்று நீர்வரத்து, 134 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில், 12.20 அடிக்கு மண் சேர்ந்துள்ளதாலும், கடந்த மூன்று நாட்களில், 7.10 அடி உயரம் தண்ணீர் வந்துள்ளதாலும், நேற்று அணை நீர்மட்டம், 19.30 அடியாக இருந்தது. அணையில் இருந்து தண்ணீர் ஏதும் திறக்கப்படவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக ஓசூரில், 19 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. இதே போல், ஊத்தங்கரை, 14.60, தேன்கனிக்கோட்டை, 13, சூளகிரி, 8, ராயக்கோட்டை, 7.50, நெடுங்கல், 5.60, அஞ்செட்டி, 5, கிருஷ்ணகிரி, 4.40 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X