சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெவ்வேறு விபத்தில் மூதாட்டி உட்பட இருவர் பலி

Added : மே 23, 2020
Share
Advertisement

ஓசூர்: சூளகிரி பகுதியில் நடந்த வெவ்வேறு விபத்தில், மூதாட்டி உட்பட இருவர் பலியாகினர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சாமல்பள்ளத்தை சேர்ந்தவர் பொன்னுசுந்தரி, 70. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த லாரி, பொன்னுசுந்தரி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சூளகிரி அடுத்த சிக்கமாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 36. இவர் நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், சூளகிரி பவர்கிரேடு அருகே, நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், வெங்கடேஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த வெங்கடேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். தொடர்ந்து வந்த வாகனங்கள், வெங்கடேஷ் சடலம் மீது ஏறி சென்றதால் சிதைந்தது. விபத்து குறித்து, சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X