ரஷ்யாவை முந்தியது பிரேசில்: கொரோனா பாதிப்பில் இரண்டாமிடம்

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
Brazil, Coronavirus, Corona Cases, brazil coronavirus,
 கொரோனா, வைரஸ், பாதிப்பு, பிரேசில், இரண்டாமிடம்

பிரேசிலியா: கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாம் இடத்திலிருந்த ரஷ்யாவை தற்போது பிரேசில் முந்தியுள்ளது.

21 கோடி மக்கள் தொகை கொண்ட தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனா வைரஸ் பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளது. இதுவரை 3 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 21,116 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்சுக்கு அடுத்தபடியாக அதிக உயிரிழப்புகளை கொண்ட 6-வது நாடாக பிரேசில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 1,001 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் மூன்றாவது முறையாக ஒரே நாளில் ஆயிரம் பேரை இழந்துள்ளது.


latest tamil news


‛பல தென் அமெரிக்க நாடுகளில் இது தொடர்பான கவலைகளை காணமுடிகிறது. அதிலும் பிரேசில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது,' என நேற்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்த நிலையில், தொற்று பாதிப்பில் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது பிரேசில். தீவிர வலதுசாரி அதிபரான ஜெய்ர் போல்சனாரோ, ஆரம்பத்தில் கொரோனா வைரஸை சிறிய காய்ச்சலுடன் ஒப்பிட்டார். கடுமையான சமூக விலகல் விதிமுறைகளை வகுத்த சுகாதார அமைச்சரை வீட்டுக்கு அனுப்பினார். அடுத்து பொறுப்பேற்ற சுகாதார அமைச்சரும் ஒரு மாதத்திற்குள் பதவி விலகினார். தேவையில்லாமல் பொருளாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்துக்கிறார்கள் என ஊரடங்கை அறிவித்த மாநில கவர்னர்களையும் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sharvintej - madurai,இந்தியா
23-மே-202014:54:17 IST Report Abuse
Sharvintej தீவிர வலதுசாரி அதிபரான ஜெய்ர் போல்சனாரோ, ஆரம்பத்தில் கொரோனா வைரஸை சிறிய காய்ச்சலுடன் ஒப்பிட்டார். கடுமையான சமூக விலகல் விதிமுறைகளை வகுத்த சுகாதார அமைச்சரை வீட்டுக்கு அனுப்பினார். அடுத்து பொறுப்பேற்ற சுகாதார அமைச்சரும் ஒரு மாதத்திற்குள் பதவி விலகினார். தேவையில்லாமல் பொருளாதாரத்திற்கு தீங்கு ஏற்படுத்துக்கிறார்கள் என ஊரடங்கை அறிவித்த மாநில கவர்னர்களையும் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. "கம்யூனிஸ்டுக்கு சொம்படிக்கிற கூட்டம் எங்கே காணோம்??"{
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
23-மே-202014:43:01 IST Report Abuse
sundarsvpr புராணங்களில் பூமியில் உள்ளவர்கள் தேவ லோகம் திருப்பாற்கடல் கைலாயம் பிரம லோகம் செல்வார்கள் திரும்புவார்கள் என்பதை கண்டோம். பூமியில் கொரோனா இல்லாத இடம் இல்லை. வேறு லோகத்திற்கு செல்ல வாய்ப்பு தற்போது இல்லை. கொரோனா எதிர்ப்பை சமாளிக்க வழிமுறை காணவேண்டும்.
Rate this:
Cancel
Paramasivam - Chennai,இந்தியா
23-மே-202014:30:07 IST Report Abuse
Paramasivam இப்போவாவது இந்திய அரசின் லாக்டவுன் அவசியத்தை புரிந்து கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X