பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்கள் கை கழுவ தானியங்கி இயந்திரம் அமைப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில், பொதுமக்கள், பணியாளர்கள் கை கழுவ தானியங்கி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.


பள்ளிபாளையத்தில், 21 வார்டுகள் உள்ளன. தினமும் ஏராளமான மக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு வருகின்றனர். அதிகாரிகள், பணியாளர்கள, தூய்மை பணியாளர்கள் என ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா பரவலை தடுக்க, கை கழுவ வேண்டும். இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது விதிமுறை. நேற்று முதல், நகராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் முன், கை கழுவ தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டது. இதன் கீழ்ப்பகுதியில் இரண்டு கைகளை நீட்டினால் போதும், கிருமி நாசினி தெளிப்பு ஒரு நிமிடம் வரை சாரல் மழை போல கொட்டுகிறது. இதன் பயன்பாட்டை ஆணையாளர் இளவரசன், பொறியாளர் சரவணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, பொதுமக்களும், பணியாளர்களும் இதில் கை கழுவினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X