நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் துவக்கம்

Added : மே 23, 2020
Share

நாமக்கல்: நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா பரிசோதனை மையத்தை, அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் துவக்கி வைத்தனர்.


தமிழகத்தில், கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து வருகிறது. அதன்படி, சென்னை, கோவை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், ஏற்கனவே கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு, வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தமாதிரி, சளி ஆகியவற்றை சேகரித்து சேலம், கோவைக்கு அனுப்பி கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வந்தது.. அதனால், நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 'கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் ஏற்படுத்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதையடுத்து, கடந்த, 19ல், அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், மின்துறை அமைச்சர் தங்கமணி, சத்துணவு துறை அமைச்சர் சரோஜா ஆகியோர், கொரோனா பரிசோதனை கருவி பயன்பாட்டை நாமக்கல்லில் துவக்கி வைத்தனர். கலெக்டர் மெகராஜ், எஸ்.பி., அருளரசு, மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, எம்.எல்.ஏ., பாஸ்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X