பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறி தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

Added : மே 23, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விசைத்தறி தொழிலாளர்களுக்கு, நிவாரணம் வழங்க வேண்டும்' என, விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்னாள் மாவட்ட பொருளாளர் சிங்காரம் கோரிக்கை விடுத்துள்ளார்.


அவரது அறிக்கை: வெண்ணந்தூர் ஒன்றியத்தில், 15 கிராமங்களில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும், விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுப்படி ஊரடங்கு கடைப்பிடித்து வருகிறோம். கடந்த, ஐந்து வாரங்களாக விசைத்தறி கூடங்கள் மூடப்பட்டுள்ளன. அதனால், தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. ஆர்டர் வரும் என்கின்ற நம்பிக்கையில் விசைத்தறியாளர்கள் ஜவுளி உற்பத்தி செய்து தேக்கி வைத்துள்ளனர். ஏற்கனவே அனுப்பி வைத்த ஜவுளிகளுக்கு அண்டை மாநில வியாபாரிகளிடமிருந்து பணம் வரவில்லை. அதனால் விசைத்தறியாளர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். தொழிலாளர்களும் விசைத்தறி உரிமையாளர்களும், கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, விசைத்தறியாளர்கள் நலன்கருதி அரசு நிவாரணம் தர வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X