பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ டிரைவர்களுக்கு நிவாரண பொருள் வழங்கல்

Added : மே 23, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல்லில், ஆட்டோ டிரைவர்கள், 300 பேருக்கு அமைச்சர் தங்கமணி நிவாரண உதவிகளை வழங்கினார். ஊரடங்கால் கடந்த இரண்டு மாதங்களாக போக்குவரத்து எதுவும் இயங்கவில்லை. வாடகை கார், ஆட்டோ, ?ஷர் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் போதிய வருவாயின்றி பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அந்தந்த பகுதி ஆட்டோ டிரைவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்து வந்தனர். அந்த வகையில், நாமக்கல் ஆர்.டி.ஓ., கோட்டைகுமாரிடம் ஆட்டோ டிரைவர்கள் நேற்று முன்தினம் மனு அளித்திருந்தனர். நேற்று, நாமக்கல்-துறையூர் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில், 300 ஆட்டோ டிரைவர்களுக்கு, 15 கிலோ அரிசி மற்றும் பருப்பு சமையல் எண்ணெய் ஆகியவற்றை அமைச்சர் தங்கமணி வழங்கினார். அமைச்சர் சரோஜா, கலெக்டர் மெகராஜ், எஸ்.பி., அருளரசு, எம்.எல்.ஏ., பாஸ்கர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X