நாமக்கல் முருகன் கோவிலில் கிருத்திகை விழா அலங்காரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல் முருகன் கோவிலில் கிருத்திகை விழா அலங்காரம்

Added : மே 23, 2020
Share
நாமக்கல்: வைகாசி கிருத்திகை மற்றும் அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் அதன் சுற்று வட்டார முருகன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. * நாமக்கல், காந்தி நகர், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை, 9:00 மணிக்கு மூலவருக்கு அபி?ஷகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டது. * நாமக்கல், கடைவீதி சக்தி கணபதி கோவில்,

நாமக்கல்: வைகாசி கிருத்திகை மற்றும் அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் அதன் சுற்று வட்டார முருகன் கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

* நாமக்கல், காந்தி நகர், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை, 9:00 மணிக்கு மூலவருக்கு அபி?ஷகம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு வெள்ளிக் கவசம் சாற்றப்பட்டது.


* நாமக்கல், கடைவீதி சக்தி கணபதி கோவில், பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகங்கள் செய்யப்பட்டு, ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

* நாமக்கல் அடுத்த கூலிப்பட்டி கந்தகிரி மலைக்கோவிலில் பழனியாண்டவர் கோவிலில் சுவாமிக்கு வெள்ளிகவசத்துடன் திருநீறு அலங்காரம் செய்யப்பட்டது.


* மோகனூர் காந்தமலை, பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை நடந்தது.


* மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலை மலைகுன்றின் மீது பாலசுப்ரமணி எனும் பெயரில் முருகன் கோவிலில், ஆகம விதிப்படி, சுவாமிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X