குமாரபாளையம்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதை, பழைய இடத்துக்கே மாற்ற, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: இரு மாதங்களாக பஸ் ஸ்டாண்டில் காய்கறி மார்க்கெட் நடத்தி வருகிறோம். தினமும், நான்கு மணி நேரம் மட்டுமே விற்பனை செய்ய நகராட்சியினர் கால அவகாசம் தருகின்றனர். நாங்களும் எங்கள் காய்கறிகளை மூட்டைகளாக கட்டி அங்கேயே வைத்துவிட்டு வருகிறோம். பகல் நேரங்களில் அறிமுகம் இல்லாத பல நபர்கள் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் சுற்றி வருகின்றனர். எங்கள் பொருட்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படுகிறது. கோடைகாலத்தில் காய்கறிகள் மூட்டையில் போட்டு கட்டி விடுவதால் விரைவில் அழுகும் நிலையும் ஏற்படுகிறது. மார்க்கெட்டில் குறைந்த நேரம் மட்டுமே காய்கறி கிடைக்கும் என்பதால் காலை நேரம் கூட்டம் சற்று அதிகமாக உள்ளது. பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடையிலும், நடமாடும் காய்கறி கடையிலும் வாங்கி விடுவதால் மார்க்கெட் வந்து வாங்குவோர் எண்ணிக்கை மிக குறைந்துள்ளது. எனவே, எங்களை பழைய இடத்தில் காய்கறி வியாபாரம் செய்திடவும், மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை போல், காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை அனுமதி தரவும் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE