நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, 10வது வார்டு அண்ணா காலனியில் கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இருந்ததையடுத்து இப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.
இப்பகுதியை சேர்ந்த, 270 குடும்பத்தினருக்கு, கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் அரிசி, பருப்பு, காய்கறி வகைகள், முட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் வழங்கினார். ஒன்றிய செயலாளர் ராமசுவாமி, பேரூர் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சீராப்பள்ளி, 13வது வார்டு, தி.மு.க., செயலாளர் முருகன் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தபடியே மருந்து உட்கொண்டு வருகிறார். அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ராஜேஷ்குமார் நிவாரண நிதி வழங்கினார். எருமப்பட்டி ஒன்றிய நிர்வாகி கண்ணன் குடும்பத்தினருக்கு, நிவாரண தொகை வழங்கினார். புதுச்சத்திரம் ஒன்றியம் களங்காணியில், 50 குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கினார். மாவட்டத்தில் உள்ள காது கேட்காத, வாய்பேசாதவர்களுக்கும், ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் ராஜேஷ்குமார் கொரோனா நிதி, பொருட்களை வழங்கினார். பள்ளிபாளையத்தில், ஏழை தொழிலாளர்கள், 1,500 பேருக்கும், நாமக்கல் நகராட்சி தும்மங்குறிச்சியில், தீ விபத்தால் வீடு இழந்தவர்களுக்கும், நிவாரண மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்.