சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் வங்கி கிளை ரூ.7 லட்சம் மோசடி: ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் புகார்

Added : மே 23, 2020
Share
Advertisement

நாமக்கல்: தனியார் வங்கி கிளை, ஏழு லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக, ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர், நாமக்கல் எஸ்.பி.,யிடம் மனு அளித்துள்ளார்.


திருச்செங்கோடு அடுத்த குப்பாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் கேசவபாண்டியன், 40. ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், 2019, டிச., மாதம், தனியார் வங்கி கிளையில், ஏழு லட்சம் ரூபாய் கடன் பெற்றதாகவும், கடந்த, மூன்று மாதமாக அத்தொகையை செலுத்தாததால், அவருடைய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தனியார் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிர்ச்சியடைந்த கேசவபாண்டியன், தான், ஏழு லட்சம் ரூபாய் கடன் வாங்கியது தொடர்பாக எவ்வித ஆவணங்களும் சமர்ப்பிக்கவில்லை. அப்படி இருக்கும் நிலையில், எப்படி கடன் வாங்கியிருப்பேன். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட வங்கி கிளை மேலாளர், ஊழியர்களிடம் விசாரணை நடத்தக்கோரி, அந்த தனியார் வங்கி தலைமை அலுவலகத்துக்கு புகார் மனு அனுப்பி இருந்தார். மேலும், நாமக்கல் எஸ்.பி., அருளரசிடம், புகார் அளித்தார். அதையடுத்து, மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். இதுகுறித்து, குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுபாஷ் கூறுகையில், ''மனு மீது விசாரணை நடத்துவதற்காக, வரும், 26 காலை, 11:00 மணிக்கு, கேசவபாண்டியன், தனியார் வங்கி மேலாளர் ஆகியோரை நேரில் ஆஜராக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X