மல்லசமுத்திரம்: சென்னம்பாளையத்தில், ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலையால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். மல்லசமுத்திரம் ஒன்றியம், சென்னம்பாளையத்தில் இருந்து, கொட்டகாட்டனூர் செல்லும் சாலை, ஒரு கி.மீ., தொலைவு கொண்டது. இச்சாலையில், தினமும் அதிகளவில் இருசக்கர, இலகுரக, கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால், சாலை, குண்டும், குழியுமாக காட்சியளித்ததால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். மக்களின் வேண்டுகோளை ஏற்று, சாலையை சீரமைக்க, கடந்த சில மாதங்களுக்கு முன், சாலையில் ஜல்லி, மண் போட்டு சமன்படுத்தினர். தற்போது, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, வாகனஓட்டிகள் மற்றும் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, விரைவில் சாலைப் பணிகளை முடிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE