நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகளின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால், அவை சாலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவு உள்ளதால், உள் நோயாளிகளை பார்வையிட வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரச கால சிகிச்சையும், புற நோயாளிகள் பரிசோதனையும் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. அந்த பிரிவுகளுக்கு உள்ளூர் மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமானோர் புற நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் அச்சத்தால் மருத்துவமனையின் முகப்பு கதவு மூடப்பட்டு புறநோயாளிகள் உள்ளிட்டவர்களை மருத்துவமனையின் வெளியே நீண்ட நேரம் காக்கவைத்து பின் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதில், வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள் என பலதரப்பட்டவர்களும் காக்கவைக்கப்படுகின்றனர். மேலும், அவர்கள் வரும் வாகனங்களையும் உள்ளே அனுமதிக்காததால், அந்த வாகனங்கள் மோகனூர் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. அவை, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. எனவே, புற நோயாளிகள் மட்டும் அமர்ந்து மருத்துவரிடம் சிகிச்சை பெறும் வகையில் தற்காலிக பந்தல் அமைத்து தரவும் வாகனங்ளை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE