'வெளிச்சத்தை நோக்கி நடந்தேன்' - உயிர் பிழைத்த பாக்., பயணியின் திக் திக் நிமிடங்கள்!

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
Pakistan, Plane Crash, plane crash Survivor, Pakistan International Airlines, Pakistan plane crash,
 பாகிஸ்தான், விமானம், விபத்து, தப்பியவர்

கராச்சி: பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் முதல் முயற்சியில் கிட்டத்தட்ட தரைக்கு வந்ததாகவும், பின்னர் மீண்டும் புறப்பட்டு 10 நிமிடங்கள் பறந்ததாகவும் உயிர் பிழைத்தவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் லாகூரிலிருந்து 99 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் கராச்சியின் ஜின்னா சர்வதேச விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தரையிறக்கம் செய்வதில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இரண்டாம் முறை தரையிறங்க முயற்சித்த போது குடியிருப்பு பகுதியில் மோதி வெடித்தது. இதில் அதிசயமாக இருவர் உயிர் பிழைத்தனர். இதுவரை 80-க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சில வீடுகள் முற்றிலுமாக இடிந்துள்ளதால், மீட்கப்பட்ட உடல்கள் விமானத்தில் பயணித்தவர்கள் தானா என்பது உறுதி செய்யப்படவில்லை.


latest tamil news


விபத்து நடந்த மாலிர் பகுதியின் மாடல் காலனியில் ஒரு வீட்டின் மாடியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் இவ்விபத்து பதிவாகியுள்ளது. விபத்தில் உயிர் பிழைத்தவர்களில் ஒருவர் பஞ்சாப் வங்கியின் தலைவர் சாபர் மசூத், மற்றொருவர் பொறியாளர் முகமது சுபைர். கராச்சி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இவர், ஜியோ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “முதல் தரையிறக்கத்தின் போது விமானம் தரையை தொட்டுவிட்டு விரைவில் மீண்டும் பறந்தது. சுமார் 10 நிமிடங்கள் பறந்த பிறகு, விமானி தான் இரண்டாவது முயற்சியை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தார். அதற்குள் விமானம் மோதி விபத்துக்குள்ளானது.

சுற்றிலும் புகை மற்றும் நெருப்பை மட்டுமே பார்க்க முடிந்தது. எல்லா திசைகளில் இருந்தும் அலறல் சத்தம் மட்டுமே கேட்டது. குழந்தைகள், பெரியவர்களின் அலறல். யாரையும் என்னால் பார்க்க முடியவில்லை. சீட் பெல்ட்டை விடுவித்து வெளிச்சம் வந்த திசையில் சென்றேன். அங்கிருந்து 10 அடி கீழே குதித்து உயிர் பிழைத்தேன்.” என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan - Dehradun,இந்தியா
26-மே-202015:57:41 IST Report Abuse
Nallavan கடவுள் இவர்கள் இருவருக்கும் இரண்டாவது வாழ்க்கையை வாழ கொடுத்து vullar. மிகவும் கொடுத்து வைத்தவர்கள்
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
24-மே-202017:11:17 IST Report Abuse
Krishnamurthy Venkatesan சாவின் விளிம்பிலிருந்து மீண்ட அவருக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-மே-202018:36:16 IST Report Abuse
Natarajan Ramanathan allah, the most merciful saved just two persons.
Rate this:
ramesh - kanchipuram,இந்தியா
25-மே-202023:58:23 IST Report Abuse
rameshy didn't safe all others including children's...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X