கரூர்: திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி., பால கிருஷ்ணன் காணொலி மூலம், பொதுமக்களிடம், குறைகளை கேட்க உள்ளார்.
இதுகுறித்து, திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி., அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி.,யின் பொதுமக்கள் குறைதீர் கூட்டம், திங்கள், வெள்ளி கிழமைகளில் மதியம், 12:00 முதல், 1:00 மணி வரை, டி.ஐ.ஜி., அலுவலகத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், போக்குவரத்து வசதி இல்லாததால், மிக அவசரம் மற்றும் அவசிய காரணங்களுக்காக புகார் தெரிவிக்க விரும்புகிறவர்களை, திங்கள், வெள்ளி கிழமைகளில் மதியம், 12:00 மணி முதல், 1:00 மணி வரை, காணொலி மூலம் சந்தித்து டி.ஐ.ஜி., பாலகிருஷ்ணன் குறைகளை கேட்க உள்ளார். புகார் தெரிவிக்க விரும்புகிறவர்கள், டி.ஐ.ஜி., அலுவலக தொலைபேசி எண், 0431-2333909 ஐ தொடர்பு கொண்டு, பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் விபரங்களை தெரிவிக்கலாம். டி.ஐ.ஜி., அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் விபரங்கள், அந்தந்த உட்கோட்ட தனிப்பிரிவு பொறுப்பு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, புகார்தாரர்களை மொபைல் மூலம் தொடர்பு கொண்டு, காணொலி கூட்டத்தில் பங்கு பெற அனைத்து உதவிகளும் செய்யப்படும். கரூர் மாவட்டத்தில், கரூர் டவுன், பசுபதி பாளையம், தான்தோன்றிமலை, வெள்ளியணை, வெங்கமேடு, வாங்கல் போலீஸ் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்தவர்களுக்கான, தனிப்பிரிவு பொறுப்பு அலுவலர் மொபைல் எண், 94981-61252. அதேபோல், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை, வேலாயுதம்பாளையம் ஆகிய, போலீஸ் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்தவர்களுக்கு, தனிப்பிரிவு பொறுப்பு அலுவலர் மொபைல் எண், 94981-61594. மேலும், குளித்தலை, லாலாப்பேட்டை, மாயனூர், தோகைமலை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி போலீஸ் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்தவர்களுக்கு, தனிப்பிரிவு பொறுப்பு அலுவலர் மொபைல் எண், 94425-51323. இவ்வாறு, அறிக்கையில் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE