குளித்தலை: குளித்தலை, டி.எஸ்.பி., அலுவலக வளாகத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மற்றும் போலீசாருக்கு மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., கும்மராஜா தலைமை வகித்தார் . உட்கோட்டத்தில் உள்ள கிராமத்தில் முன்கூட்டியே சம்பவம் நடைபெறுவது குறித்து தகவல் தெரிந்தால் உடனே தடுக்கவேண்டும், குற்றச் சம்பவம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், வழக்குகளை நீதி மன்றத்தில் வேகப்படுத்திட ஆவணங்களை துரிதப்படுத்தி சமர்ப்பிக்க வேண்டும். தேக்கம் இல்லாமல் வழக்குகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும். வழக்கு பதிவுசெய்யும் போது சட்டத்தை நன்கு அறிந்து வழக்கு பதிவு செய்யவேண்டும். மாவட்ட நிர்வாகம் கேட்கும் தகவல்களை தொய்வு இல்லாமல் உட்கோட்டத்திற்கு வழங்கவேண்டும் என, கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குளித்தலை, லாலாபேட்டை, மாயனூர், தோகைமலை, சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி, அனைத்து மகளிர் போலீஸ், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, அனைவருக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE