மருத்துவ பணியாளர்களுக்கு என்-95 மாஸ்க் வழங்க கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவ பணியாளர்களுக்கு 'என்-95' மாஸ்க் வழங்க கோரிக்கை

Added : மே 23, 2020
Share
குளித்தலை: 'குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவப் பணியாளர்களுக்கு, 'என்-95 மாஸ்க்' பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, நாள்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், மஹாராஷ்டிராவில் இருந்து

குளித்தலை: 'குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மருத்துவப் பணியாளர்களுக்கு, 'என்-95 மாஸ்க்' பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவேண்டும்' என, கோரிக்கை எழுந்துள்ளது.
குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தனிவார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, நாள்தோறும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், மஹாராஷ்டிராவில் இருந்து வந்த கல்லூரி மாணவியர் உள்பட, ஒன்பது பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அது போல், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, ரிசல்ட் வரும் வரை, தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஆனால், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அவர்கள் வார்டில் இல்லாமல் வெளியில் சுற்றித்திரிவதால் மருத்துவ பணியாளர்களும், செவிலியர்களும் அச்சத்தில் உள்ளனர். மேலும், கொரோனா பரிசோதனை செய்யும் மருத்துவ பணியாளர்களுக்கு, 'என்-95 மாஸ்க்' மற்றும் பாதுகாப்பு உடை ஆகியவற்றை வழங்க வேண்டுமென, மருத்துவ பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X