கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் மதுபான கடைகளில், விலை பட்டியல் வைக்கப்படவில்லை.
ஊரடங்கை முன்னிட்டு, மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள் கடந்த, 7ல் திறக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால் கடந்த, 8ல் மூடப்பட்டன. இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் கடந்த, 16ல் திறக்கப்பட்டன. ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் எதிர்பார்த்த அளவில், மது பாட்டில்கள் விற்பனை ஆகாமல், 'டல்' அடித்தது. பிறகு, அதிகாரிகள் நடத்திய விசாரணையில், மதுபாட்டில்களை, 'எம்.ஆர்.பி.' எனப்படும் அதிகபட்ச சில்லரை விலையை விட கூடுதலாக, ஊழியர்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும், டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்களுக்கும், குடி மகன்களுக்கும், அதிக விலை தொடர்பாக தகராறும் ஏற்பட்டது. இதனால், அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும், உயர்த்தப்பட்ட விலையின் அடிப்படையில், விலை பட்டியல் வைக்க வேண்டும் என, மாநில டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், கரூர் மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபான கடைகளில், விலை பட்டியல் வைக்கப்படவில்லை. ஒரு சில கடைகளில் மட்டும் விலை பட்டியல், குடிமகன்கள் கண்ணுக்கு தெரியாத வகையில், வைக்கப் பட்டுள்ளது. இதனால், மாநில டாஸ்மாக் நிர்வாகத்தின் உத்தரவு, கரூர் மாவட்டத்தில் காற்றில் பறக்கிறது. அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளிலும், விலை பட்டியல் வைக்க, டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE