பொது செய்தி

தமிழ்நாடு

திருச்சி மத்திய மண்டலத்தில் ஊரடங்கு: ஒரு லட்சம் பேர் கைதாகி விடுதலை

Added : மே 23, 2020
Share
Advertisement
கரூர்: திருச்சி மத்திய மண்டலத்தில், ஊரடங்கு உத்தரவு காலத்தில் வெளியே சென்ற, ஒரு லட்சம் பேர், கைதாகி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடந்த மார்ச் மாதம், 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வரும், 31 வரை நான்காம் கட்டமாக, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர்,

கரூர்: திருச்சி மத்திய மண்டலத்தில், ஊரடங்கு உத்தரவு காலத்தில் வெளியே சென்ற, ஒரு லட்சம் பேர், கைதாகி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, கடந்த மார்ச் மாதம், 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வரும், 31 வரை நான்காம் கட்டமாக, ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. திருச்சி மத்திய மண்டலத்துக்குட்பட்ட திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில், ஊரடங்கின் போது தேவையில்லாமல், வெளியில் சுற்றியதாக, 93 ஆயிரத்து, 600 பேர் மீது அந்தந்த மாவட்ட போலீசார், வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்து, 641 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட, 72 வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X