கரூர்: 'காவிரி பாசன பகுதியில் உள்ள, 17 வாய்க்காலில் நீர் தேவை ஆணையை செயல்படுத் தும் வகையில், கண்டிப்பான உத்தரவை தமிழக அரசு அளிக்க வேண்டும்' என, காவிரி பாசன விவசாயிகள் நலச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் விடுத்துள்ள அறிக்கை: மேட்டூர் அணை கட்டப்பட்டது முதல் வரும் ஜூன், 12ல், 17வது முறையாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தற்போது அணையில், 100.1 அடி தண்ணீர் உள்ளது. இந்த நீர் வரும், 50 நாட்களுக்கு பாசனத்துக்கு போதுமானது. அதன்பிறகு, தென்மேற்கு பருவமழையால் கிடைக்கும், நீரை அனுசரித்து வரும் ஜனவரி, 28 வரை தொடர்ந்து நீர் திறந்து விடப்படும் என, தமிழக அரசு நம்புகிறது. காவிரி டெல்டா விவசாயத்தோடு, காவிரி பாசன பகுதியான கல்லணைக்கு மேல் மற்றும் மேட்டூருக்கு கீழ், 17 வாய்க்கால் பாசனத்துக்கு, விநாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் விட அரசாணை உள்ளது. தமிழக அரசு அதாவது, 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட அரசு நினைத்தால், மேட்டூர் அணையில் இருந்து, 13 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும். இந்த அரசாணையை, கண்டிப்பாக செயல்படுத்தும் வகையில், அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். டெல்டா பாசன பகுதியில், 12 மணி நேரம் தடையில்லாத மும்முறை மின்சாரம் கிடைக்க மின் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வரின் உத்தரவு காவிரி பாசன பகுதிக்கும் தொடர வேண்டும். மரவள்ளி கிழங்குக்கு முக்கியத்துவம் அளித்து, அதன் விளைச்சலை ஊக்குவிக்கும் மத்திய அரசுக்கும், வாழை விளைச்சலுக்கு முக்கியத்துவம் அளிக்கும், மாநில அரசுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE