பொது செய்தி

தமிழ்நாடு

சமூக தொற்றாக கொரோனா வைரஸ் மாறவில்லை: போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு

Added : மே 23, 2020
Share
Advertisement

கரூர்: ''கரூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறவில்லை,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, சிறப்பு கடன் உதவி வழங்கும் விழா, கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். அதில், 40 மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த, 483 பேருக்கு, 32 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய்க்கான கடன் உதவியை காசோலையாக, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். பின்னர், அவர் பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், ஏற்படும் பொருளாதார இழப்பை சரிகட்டும் வகையில், கூட்டுறவு துறை மூலம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, எளிய தவணையில் செலுத்தும் வகையில், குறைந்த வட்டியில், கடன் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், இந்த கடன் தொகை வழங்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது, வெளிமாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களுக்கு, சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று சமூக தொற்றாக மாறவில்லை. மாவட்ட நிர்வாகம், போலீசார், டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்களின் கடுமையான உழைப்பே இதற்கு காரணம். அவர்களின் பணி பாராட்டுக்குரியது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X