சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் அடகு கடையில் கொள்ளையடித்த மர்ம நபர் கைது

Added : மே 23, 2020
Share
Advertisement
தனியார் அடகு கடையில் கொள்ளையடித்த மர்ம நபர் கைது

திருப்பூர்: திருப்பூர் குமரன் நகர் சாலையில் தனியார் நகை அடகுக்கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 19ல் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், கடையில் இருந்த ஊழியர்களை அரிவாளை காட்டி மிரட்டி, ரூ.20 ஆயிரம் மற்றும் பத்து சவரன் நகையை திருடி சென்றார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், திருப்பூர், சிறுபூளப்பட்டியை சேர்ந்த அழகுமலை என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கொள்ளையடித்த கடையில் நகை அடகு வைத்துள்ள அழகுமலை அடிக்கடி சென்று வந்துள்ளார். இதனால், எப்போது எத்தனை பேர் இருப்பர் என்பதை நன்கு அறிந்து வைத்திருந்த அவர், நேரம் பார்த்து கொள்ளைடித்துள்ளார். மேலும், வேளம்பாளையம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் நகையை பறித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியார் அடகு கடையில் அழகுமலை கொள்ளையடித்தது. அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X