ஓராண்டுக்குள் மேல்நிலை தொட்டி சேதம்: குடிநீர் வினியோகத்தில் தொய்வால் தவிப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

கரூர்: பயன்பாட்டுக்கு வந்து, ஓராண்டுக்குள் மேல்நிலை தொட்டி சேதமடைந்ததால், குடிநீர் வினியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம், கடவூர் பஞ்சாயத்துக்குட்பட்ட, அய்யம்பாளையத்தில் மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ், 11.10 லட்சம் ரூபாய் செலவில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி, போர்வெல், புதிய மின் மோட்டார் அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது, தொட்டியில் நீர் கசிந்து தண்ணீர் வீணாகிறது.

இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடவூர் பஞ்.,ல், 12ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் உள்ளனர். குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வந்தனர். குடிநீர் பற்றாக்குறையை போக்க, கடந்த ஆண்டு புதிய மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. இதனை, ஒப்பந்ததாரர் முறையாக கட்டவில்லை. ஆகவே, தொட்டி பயன்பாட்டுக்கு வந்து ஒரு ஆண்டு கூட நிறைவு பெறாத நிலையில், தொட்டியில் கீழ்புறம் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தொட்டி உடைந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. முழு கொள்ளளவு தண்ணீர் ஏற்றினால், தொட்டி சேதமாகி விடும் என்பதால், குறைந்த அளவே தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதனால், தண்ணீர் சொற்ப அளவே வழங்கப்படுகிறது. உடனடியாக தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X