பொது செய்தி

தமிழ்நாடு

37 நாட்களுக்கு பிறகு ஈரோட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று

Added : மே 23, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 37 நாட்களுக்குப்பின், ஆண் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி வி.ஐ.பி., நகரை சேர்ந்த, 50 வயது ஆண், ஐந்து நாட்களுக்கு முன் மேவாணி அருகே டூவீலரில் சென்றபோது விபத்துக்குள்ளானார். ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கடந்த, 19ல், சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்துக்கான சிகிச்சைக்கு இடையே, கொரோனா பரிசோதனை செய்தபோது, தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து கொரோனாவுக்கான சிகிச்சை, அவருக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் அவர் வசித்த பகுதியில், 17 பேரை சுகாதார அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில், ஏப்.,15க்குப்பின், 37 நாட்களாக கொரோனா தொற்று இல்லாத நிலையில், நேற்று ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X