பொது செய்தி

தமிழ்நாடு

அந்தியூர் செல்வராஜூக்கு கட்சியில் உயர் பதவி: ஒதுங்கி இருந்தவருக்கு வழங்கியதால் அதிருப்தி

Added : மே 23, 2020
Share
Advertisement

ஈரோடு: தி.மு.க., மாநில துணை பொதுச் செயலாளர் பதவி, அந்தியூர் செல்வராஜூக்கு வழங்கப்பட்டதில், தி.மு.க.,வினர் உற்சாகம் இழந்துள்ளனர்.
ஈரோடு அருகே, புத்தூறை சாலை, நல்லான்தொழுவை சேர்ந்தவர் அந்தியூர் செல்வராஜ். நிலம், வீடு போன்றவை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். கடந்த, 1996 - 2001 தி.மு.க., ஆட்சியில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று, கதர் துறை அமைச்சரானார். அப்போது, பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் விழாவில் குண்டம் இறங்கியதால், கருணாநிதியால் கண்டிக்கப்பட்டார். அடுத்து, 2001 சட்டசபை தேர்தலில் அந்தியூரில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அத்துடன் கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தவருக்கு கடந்த, ஏப்.,3ல் ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டது. தற்போது, தி.மு.க., துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, பா.ஜ., தலைவரை சந்தித்ததால், அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவருக்கே அப்பதவியை வழங்க வேண்டும் என்ற நோக்கில், அந்தியூர் செல்வராஜுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட, தி.மு.க.,வினர் கூறியதாவது: கட்சியினர், மக்களுடன் நெருக்கம் காட்டாத அந்தியூர் செல்வராஜூக்கு பதவி வழங்கப்பட்டதால், கட்சிக்கு பெரிய பலன் இருக்காது. பல ஆண்டாக ஒதுங்கியிருந்த அவருக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்பட்டது. ஈரோடு மாவட்ட, தி.மு.க., சார்பில் கொரோனா நிவாரண உதவி வழங்கும்போது கூட, அவர் எட்டிப்பார்க்கவில்லை. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசனும், தி.மு.க., மாநில துணை பொதுச் செயலாளராக உள்ள நிலையில், இம்மாவட்டத்துக்கு இரண்டாவதாக அதே பதவி வழங்கியதால், எந்த பலனும் இருக்காது. ஏற்கனவே, ம.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்; ஈரோடு, தி.மு.க., - எம்.பி.,யாக உள்ள கணேசமூர்த்திக்காக, கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வினர் வரிந்து கட்டி வேலை செய்தனர். ஆனால், கடந்த ஓராண்டாக அவர். தி.மு.க., மற்றும் ம.தி.மு.க., என எந்த கட்சியின் நிகழ்ச்சி, மக்கள் சந்திப்பு, போராட்டத்திலும் பங்கேற்காததால், தி.மு.க.,வுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தான் அந்தியூர் செல்வராஜாலும், ஈரோடு மாவட்ட, தி.மு.க.,வுக்கு பெரிய அளவில் செல்வாக்கு உயரப் போவதில்லை. இவ்வாறு தி.மு.க.,வினர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X