சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விளையாட்டா யோசனை; விபரீதமா செயல்: அப்பாவிகளை சிறையில் தள்ளிய 'ஊரடங்கு'

Added : மே 23, 2020
Share
Advertisement

ஈரோடு: கொரோனா ஊரடங்கால் எத்தனையோ, கூத்து நடந்துள்ளது. ஆனால், தண்டவாளத்தில் நடந்து சென்ற இருவர், விளையாட்டாக யோசித்து, விபரீதமாக செய்த ஒரு செயல், அவர்களை சிறைக்குள் தள்ளி விட்டது.
ஈரோடு ரயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட, சங்ககிரி - மகுடஞ்சாவடி ஸ்டேஷன் இடையே, ஆலங்காடு புதுப் பாளையம் பகுதி தண்டவாளத்தில், கடந்த, 18ல் ஐந்தரை அடி நீள கான்கிரீட் கல் வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலால், ரயில்வே போலீசார் கல்லை அப்புறப்படுத்தினர். இதையடுத்து குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இதில் சேலம், வீரபாண்டியை அடுத்த, பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த நாகலிங்கம், 21; பாபு, 27; ஆகியோரை கைது செய்தனர். 'நண்பர்களான இருவரும், ஊரடங்கால் வேலையிழந்து திரிந்தனர். சம்பவத்தன்று தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, தண்டவாளத்தில் கல் வைத்தால் இன்ஜின் கவிழுமா? என, விளையாட்டாக கேள்வி எழுப்பி, விபரீதமாக செய்தும் முடித்தனர். தற்போது கொரோனா ஊரடங்கால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் சரக்கு மற்றும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சம்பவத்தன்று ரயில் இயக்கப்படாததால் விபத்து தவிர்க்கப்பட்டது' என்று, ரயில்வே போலீசார் தெரிவித்தனர். அப்பாவிகள் இருவரும், தற்போது சிறையில் கம்பி எண்ணுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X