ஒரு கோடியே 37 ஆயிரத்து 637 பேர் மீண்டனர்

Updated : ஜூலை 27, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (249)
Share
Advertisement

இன்று ( ஜூலை.27ம் தேதி ) காலை: 06;45 மணி நிலவரப்படி உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 64 லட்சத்து , 5 ஆயிரத்து, 543 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 51 ஆயிரத்து 678 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 37 ஆயிரத்து 637 பேர் மீண்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இந்தியா தற்போது 3 வது இடத்திற்கு வந்துள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா என பட்டியலில் டாப்பில் உள்ளது.



முதலிடத்தில் அமெரிக்கா


உலகிலேயே அதிக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 43 லட்சத்து 71 ஆயிரத்து 839 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 49 ஆயிரத்து 849 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

பிரேசிலில் 24 லட்சத்து 19 ஆயிரத்து 901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 87,052 பேர் பலியாகினர்.

இந்தியாவில் 13 லட்சத்து 85 ஆயிரத்து 522 பேர் பாதிக்கப்பட்டு, 32 ஆயிரத்து 063 பேர் பலியாகி உள்ளனர்.

ரஷ்யாவில் 8 லட்சத்து 12 ஆயிரத்து 485 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 13,269 பேர் பலியாகினர்.

தென் ஆப்ரிக்காவில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 433 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,769 பேர் இறந்துள்ளனர்.

பெருவில் 3 லட்சத்து 79 ஆயிரத்து 884 பேர் பாதிக்கப்பட்டு 18,030 பேர் பலியாகினர்.

மெக்சிகோவில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 036 பேர் பாதிக்கப்பட்டு, 43,374 பேர் பலியாகினர்.

சிலியில் 3 லட்சத்து 45 ஆயிரத்து 790 பேர் பாதிக்கப்பட்டு 9,112 பேர் பலியாகினர்.


ஸ்பெயின் நாட்டில் 3 லட்சத்து 19 ஆயிரத்து 501 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 28 ஆயிரத்து 432 பேர் இறந்துள்ளனர்.
பிரிட்டனில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 426 பேர் பாதிக்கப்பட்டனர். 45,752 பேர் பலியாகினர்.

ஈரானில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 172 பேர் பாதிக்கப்பட்டு, 15,700 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானில் 2 லட்சத்து 73 ஆயிரத்து 113 பேர் பாதிக்கப்பட்டு 5,822 பேர் உயிரிழந்துள்ளனர்.


சவுதி அரேபியா 2 லட்சத்து 66 ஆயிரத்து 941 பேர் பாதிக்கப்பட்டு 2,733 பேர் பலியாகி உள்ளனர்.

இத்தாலியில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 118 பேர் பாதிக்கப்பட்டு 35,107 பேர் பலியாகினர்.

துருக்கியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 100 பேர் பாதிக்கப்பட்டு, 5,613 பேர் பலியாகினர்.


வங்கதேசத்தில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,928 பேர் இறந்துள்ளனர்.
ஜெர்மனியில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 741 பேர் பாதிக்கப்பட்டு 9,203 பேர் பலியாகினர்.




பிரான்சில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 528 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30,192 பேர் இறந்துள்ளனர்.

கனடாவில் 1லட்சத்து 13 ஆயிரத்து 911 பேர் பாதிக்கப்பட்டு 8,890பேர் இறந்துள்ளனர்.


சீனாவில் 83 ஆயிரத்து 830 பேர் பாதிக்கப்பட்டு, 4,634 பேர் பலியாகினர்.

ஆப்கனில் 36,157 பேர் பாதிக்கப்பட்டு 1,259 பேர் உயிரிழந்துள்ளனர்.


ஜப்பானில் 29,382 பேர் பாதிக்கப்பட்டு 996 பேர் உயிரிழந்துள்ளனர்.


ஜூன் 1 வரை ஊரடங்கு


பிரதமர் மோடி ஏப்.14ல் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வரும் மே.3 ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என தெரிவித்தார். இந்நிலையில் ( மே.1 ம் தேதி ) மத்திய அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் 14 நாட்களுக்கு மே. 17 வரை ஊரடங்கு நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீண்டும் ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.


5வது கட்ட ஊரடங்கு ஜூன் 30 வரை தொடரும்



கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்டமாக பொது ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்து மத்திய மே.30ல் அறிவிப்பு வெளியிட்டது. 5-ம் கட்டமாக மத்திய அரசு அன்லாக் 1. 0 என்ற பெயரில் சில புதிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. வெளியிடப்பட்ட தளர்வுகள் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும்:


முதல்கட்ட தளர்வுகள்:



* ஜூன் 8 முதல் ஹோட்டல்கள், ஷாப்பிங்மால்கள் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி.


இரண்டாம் கட்ட தளர்வுகள்



* இரண்டாம் கட்ட தளர்வுகளில் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பு குறித்து மாநில அரசுகளின் ஆலோசனைக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்.


மூன்றாம் கட்ட தளர்வுகள்



* மூன்றாம் கட்ட தளர்வில் சினிமா, பொழுதுபோக்கு பூங்கா, உடற்பயிற்சி கூடங்கள், மெட்ரோ ரயில்கள், நீச்சல் குளங்கள் ஆகியன திறப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழக ஊரடங்கு நீட்டிப்பு


தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களுக்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என முதல்வர் இபிஎஸ் அறிவித்துள்ளார். 8 மண்டலங்களாக பிரித்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிப்பு


தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகத்தில், மார்ச், 24ம் தேதியிலிருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் நோயை கட்டுப்படுத்த, அரசுக்கு ஆலோசனைகள் வழங்க, மருத்துவ நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.இதையடுத்து இன்று இரவு தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கை பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூலை 31 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

சென்னையில் சில தளர்வுகள், மதுரையில் முழு ஊரடங்கு
சென்னையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் படி சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னையில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை டீக்கடைகள் செயல்படலாம் என்றும் ஆன்லைன் டெலிவரிக்கு இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஓட்டல்களில் பார்சல் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. நகை, ஜவுளிக்கடைகள் மாலை 6 மணி வரை திறக்கலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் ஜூலை14 ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (249)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X