பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் இருந்து வந்த கர்ப்பணிக்கு கொரோனா

Added : மே 23, 2020
Share
Advertisement

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி, காந்தல் பேபிஹால் பகுதிக்கு, கடந்த 26 ம் தேதி சென்னையில் இருந்து 8 மாத கார்ப்பிணி ஒருவர் வந்துள்ளார். இதனையறிந்த சுகாதாரத்துறையினர் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் அவரது குடும்பத்தினரை தனிமைபடுத்தினர். பரிசோதனை முடிவுகள் இன்று வந்ததில், கர்ப்பணிக்கு கொரோனா இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. இதனையடுத்து, சுகாதார அதிகாரிகள் அந்த பெண்ணை, கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

நீலகிரி மாவட்ட கலெக்டர் கூறுகையில், மாவட்டத்தில் இதுவரை 14 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அதில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் கர்ப்பணிக்கும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X