பொது செய்தி

தமிழ்நாடு

வாழ வைக்குமா வைகாசி? ஏக்கத்தில் கிராமவாசிகள்

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020
Share
Advertisement
வாழ வைக்குமா வைகாசி? ஏக்கத்தில் கிராமவாசிகள்

பேரூர்: தென்னை ஓலையில் 'தடுக்கு' பின்னும் தொழிலில் ஈடுப்பட்டுள்ளவர்கள், வைகாசி மாதமாவது கை கொடுக்குமா என்ற ஏக்கத்தில் காத்துள்ளனர்.

கோவை, தொண்டாமுத்துார் ஒன்றியம் நொய்யல் கரையோர கிராமங்களில், தென்னை ஓலையில் 'தடுக்கு' பின்னும் குடிசைத் தொழில் நடக்கிறது. அதில், கணவன், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் முதியோர் அதிகளவில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தென்னந்தோப்புகளில் இருந்து, ஒரு ஓலை மூன்று ரூபாய்க்கு எடுத்து வந்து, 'தடுக்கு' பின்னி வாழ்ந்து வருகின்றனர். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் விற்பனை சூடு பிடிக்கும். இந்நிலையில், 'கொரோனா' காரணமாக திருமணம், கோவில் விழாக்கள் நடக்காததால் வருவாயின்றி போனது. தற்போது, வைகாசி மாதமாவது கை கொடுக்குமா என்ற ஏக்கத்தில் காத்துள்ளனர்.


latest tamil news


அறுபது ஆண்டுகளாக 'தடுக்கு' பின்னி வரும் மூதாட்டி பழனியம்மாள், கூறுகையில் ''திருமணம், கோவில் விழாக்கள் நடக்காததால், பச்சை மட்டையில் 'தடுக்கு' பின்ன யாரும் வரவில்லை. தற்போது, 'கொரோனா' குறைந்து, வைகாசி பிறந்துள்ளதால், சுப முகூர்த்தங்களை எதிர்பார்த்துள்ளோம். சின்ன வெங்காயம் சீசனும் துவங்கியுள்ளதால், பச்சை மட்டை கை விட்டாலும், பட்டறைக்கு பயன்படும் காய்ந்த 'தடுக்கு'க்கு கிராக்கி இருக்கும். அந்த நம்பிக்கையில், என்னை போன்ற பலரும், தென்னை ஓலைகளை விலைக்கு வாங்கி வந்து, ஆற்று நீரில் நனைத்து 'தடுக்கு' பின்னி தயாராக்கி வருகிறோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X