பொது செய்தி

இந்தியா

பாக்.,கிற்கு எதிராக இந்தியாவை ஆதரித்த மாலத்தீவு

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Maldives, OIC_Meet, Factually Incorrect, Pakistan, India, Islamophobia, Organization of Islamic Cooperation, Pakistan Ambassador, Munir Akram, Islamophobia in India, minority issue, Indian Prime Minister, Narendra Modi, மாலத்தீவு, ஓஐசி, கூட்டம், இந்தியா, இஸ்லாமியர்கள், போபியா, பாகிஸ்தான்

புதுடில்லி: இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பின் (ஓ.ஐ.சி) கூட்டத்தில் இஸ்லாமியப் போபியாவை வைத்து இந்தியாவை தனிமைப்படுத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சியை மாலத்தீவுகள் தடுத்து நிறுத்தி, இந்தியாவுக்கு ஆதரவளித்துள்ளது.

57 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த ஓஐசி அமைப்பின் கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. அதில், இந்தியாவில் குறிப்பாக காஷ்மீரில் இஸ்லாமியர்கள் மதரீதியாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுவதாக பாகிஸ்தான் கூறியிருந்தது. இந்தியா மீது வீண் பழிசுமத்த முடியாது என்றும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்றும் மாலத்தீவு அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
கூட்டத்தில் நியூயார்க்கில் உள்ள மாலத்தீவின் நிரந்தர பிரதிநிதி தூதர் தில்மீசா உசேன் பேசியதாவது: இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியாவை குறி வைக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் மாலத்தீவு ஆதரிக்காது.


latest tamil news


வெறுப்பு, பாரபட்சம் மற்றும் இனவெறி கலாச்சாரத்தில் உலகம் ஆபத்தான நிலையை கொண்டுள்ளது. அரசியல் மற்றும் பிற சித்தாந்தங்கள், நிகழ்ச்சி நிரல்களை ஊக்குவிப்பதற்கான ஒரு கருவியாக வன்முறை பயன்படுத்தப்படுகிறது. அரசியல் அல்லது வேறு எதையும் ஊக்குவிப்பதற்காக இஸ்லாமியப் போபியா, இனவெறி அல்லது எந்தவொரு வன்முறையும் உட்பட உலகில் எங்கும் மாலத்தீவுகள் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக உறுதியாக நிற்கின்றன.
இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நாட்டைக் குறிவைப்பது உண்மையான பிரச்னையைத் தவிர்ப்பது போன்றதாகும். இதன் மூலம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் மற்றும் பன்முக கலாச்சார சமூகம் மற்றும் 200 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் இந்தியாவை தனிமைப்படுத்துவது உண்மையில் தவறானது என்று குற்றம் சாட்டுகிறேன்.


latest tamil newsஇது தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும். இஸ்லாம் மதம் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் உள்ளது. இது அந்நாட்டின் மக்கள் தொகையில் 14.2 சதவீதம் கொண்ட இரண்டாவது பெரிய மதமாகும். சிலரின் தவறான அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தகவல் பிரச்சாரங்கள் 1.3 பில்லியன் உணர்வுகளின் பிரதிநிதியாக கருதப்படக்கூடாது. எனவே, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்புக்குள் இது போன்ற எந்தவொரு செயலையும் மாலத்தீவு ஆதரிக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek c mani - Mumbai,இந்தியா
25-மே-202023:30:29 IST Report Abuse
vivek c mani மாலத்தீவின் நிலைப்பாடு வரவேற்க தக்கது. பாக்கிஸ்தான் எடுப்பது தான் அழிந்தாலும் பரவாயில்லை இந்தியாவை அழிக்காமல் விடக்கூடாது எனும் வெறி பிடித்த நிலை. மாலதீவினை போல் மேலும் பல இஸ்லாமியா நாடுகள் வெளிப்படையாக பாகிஸ்தானை எதிர்த்து கூறினால் பாக்கிஸ்தான் தானாகவே அடங்கிவிடும். உண்மைக்கு புறம்பான பேச்சினை ஆதரித்து மதத்தினால் வரும் கூட்டை நிலைக்க வைக்க வேண்டும் என்று நினைப்பது , இஸ்லாமியா நட்டுகளுக்கே நல்லதல்ல.
Rate this:
Cancel
Mithun - Bengaluru,இந்தியா
23-மே-202020:01:58 IST Report Abuse
Mithun இதை தான் அன்று ஜின்னாஜி சொல்லி தனிநாடு கேட்டார். உங்களுக்கு தேசப்பற்று, எங்களுக்கு மதப்பற்று. இரண்டும் ஒன்று சேர்வது மிகவும் கடினம். அவர்களுக்காக 57 நாடுகள் உள்ளது. ஹிந்துக்களுக்காக உள்ள ஒரே நாடு இந்தியா மட்டும் தான். அப்படி இந்தியாவில் ஹிந்துக்கள் விரட்டியடிக்கப்பட்டால் ஹிந்துக்களை அரவணைக்கும் ஒரே நாடு அமெரிக்கா மட்டும் தான்.
Rate this:
Cancel
Raja Narasiman Vivek - Thanjavur,இந்தியா
23-மே-202019:34:43 IST Report Abuse
Raja Narasiman Vivek நல்லது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X