பொது செய்தி

இந்தியா

100 வயது பாட்டி...: கொரோனாவை வென்ற நீ ஒரு ‛‛பியூட்டி''...

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Madhya Pradesh, 100 Year Old, Recover, COVID-19, CoronaVirus, Woman, Indore, Chanda Bai, Welcomed, Neighbours, Discharged, Aurobindo Hospital, COVID-19 patient, corona recovery, corona, corona outbreak, corona cases, grandmother, மத்தியபிரதேசம், 100வயது, மூதாட்டி, பாட்டி, கொரோனா, வைரஸ், கோவிட்-19, குணமடைந்தார், டிஸ்சார்ஜ், உற்சாக வரவேற்பு

இந்தூர்: கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன 100 வயது பாட்டிக்கு உற்சாக வரவேற்பு அளித்த வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களே எளிதில் பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் நோய்த் தொற்றால் இறப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் உலக நாடுகள் கூறுகின்றன. ஆனாலும், அரிதிலும் அரிதாக சில நாடுகளில் 90 வயது, 100 வயதை கடந்தவர்களும் கொரோனாவில் இருந்து குணமான நிகழ்வுகளும் நடந்துள்ளன. அதுபோன்று இந்தியாவிலும் தற்போது நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த சாந்தா பாய் என்ற 100 வயது மூதாட்டிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.


latest tamil news



சிகிச்சையில் இருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வந்த சாந்தா பாய், கொரோனாவை முழுமையாக வென்று குணமானார். இதனால், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். வீட்டிற்கு வந்த அவருக்கு, குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 100 வயதிலும் மனஉறுதியோடு கொரோனாவை எதிர்த்து வென்ற சாந்தா பாய்க்கு பலரும் வாழ்த்து கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
23-மே-202017:03:14 IST Report Abuse
A.George Alphonse பிரமாச்சுவடியில் பெயர் நீக்கப்பட்டால் எல்லோரும் அதன் படி யமலோகம் செல்லவேண்டியதுதான்.இதெல்லாம் சும்மா கொரோனவை வென்ற நீ ஒரு பியூட்டி என்ற புகழ்ச்சி. பாட்டிக்கு ஆயுள் கெட்டி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X