ஜூனுக்கு பின்னர் தான் சர்வதேச விமானங்கள்| Will try to resume international flights before August: Hardeep Puri | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜூனுக்கு பின்னர் தான் சர்வதேச விமானங்கள்

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
சர்வதேசவிமானபோக்குவரத்து, அமைச்சர், ஹர்திப்சிங்புரி, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, Hardeep Puri,  international flights, aviation ministry, delhi, india, airlines, coronavirus, corona, covid-19, corona outbreak, corona news, corona crisis, lockdown, curfew, travel ban, covid-19 pandemic, Aviation minister,  Directorate General of Civil Aviation, DGCA

ஜூனுக்கு பின்னர் தான் சர்வதேச விமானங்கள்புதுடில்லி: கொரோனா தொற்று யூகிக்கும் வகையில் இருந்தால், ஜூன் மத்தியில் அல்லது ஜூலை இறுதியில் சர்வதேச விமான போக்குவரத்து துவங்கும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப்சிங் புரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது : சர்வதேச விமான போக்குவரத்தை துவக்குவதற்கு ஆகஸ்ட் - செப்டம்பர் வரை ஏன் காத்திருக்க வேண்டும். சூழ்நிலை மேம்பாட்டால், வைரஸ் தொற்று யூகிக்கும் வகையில் இருந்து, வைரசுடன் மக்கள் வாழ பழகி கொண்டால், சர்வதேச விமான போக்குவரத்தை துவக்குவதற்கான ஏற்பாடுகள் துவக்கப்படும்.
ஜூன் மத்தியில் அல்லது ஜூலை இறுதியில் ஏன் சர்வதேச விமான போக்குவரத்தை துவக்கக்கூடாது. உள்நாட்டு விமான பயணிகள் மொபைல் போனில் இருக்கும் ஆரோக்கிய சேது செயலியில் ஸ்டேட்டஸ் பச்சையாக இருந்தால், அவர்கள் தனிமையில் இருக்க வேண்டியது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X