சேதமடைந்த முண்டாந்துறை தடுப்பணை: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சேதமடைந்த முண்டாந்துறை தடுப்பணை: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

Added : மே 23, 2020
Share
சேதமடைந்த முண்டாந்துறை தடுப்பணை:  சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை


பேரூர்: ஆலாந்துறை அருகே சேதமடைந்துள்ள முண்டாந்துறை தடுப்பணையை புனரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை, ஆலாந்துறை அடுத்த முண்டாந்துறை நீரோடையின் குறுக்கே, 1999 - 2000ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. உபரிநீர் வெளியேற ஷட்டரும் அமைக்கப்பட்டது. இந்த தடுப்பணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரால் சுற்றுப்பகுதி விளைநிலங்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில், தடுப்பணையில் இடது ஓரத்திலும், ஷட்டர் பகுதியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டு பெய்த மழையின் போது, நீர் தேங்காமல் பெருமளவில் வீணாகியது. நடப்பாண்டு ஜூனில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. அப்போது, தடுப்பணை உடைந்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தடுப்பணையை விரைந்து புனரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயி ரமேஷ் கூறுகையில், ''தடுப்பணையின் இரு ஓரங்களிலும் விரிசல் ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. பெரிய பாதிப்பு ஏற்படுவதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை பலப்படுத்தி, துார்வாரி உயர்ந்த பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X