பொது செய்தி

இந்தியா

ஜூனுக்கு பின்னர் தான் சர்வதேச விமானங்கள்

Added : மே 23, 2020
Share
Advertisement
புதுடில்லி: ஜூனுக்கு பின்னர் தான் சர்வதேச விமானங்கள் இயக்கத்தை துவக்க முடியும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங்புரி கூறியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள சில தளர்வுகள் காரணமாக இயல்பு வாழ்க்கை திரும்பா விட்டாலும் மக்களின் நடமாட்டம் மட்டும் அதிகரித்துள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
சர்வதேச, விமானங்கள், இந்தியா, டில்லி

புதுடில்லி: ஜூனுக்கு பின்னர் தான் சர்வதேச விமானங்கள் இயக்கத்தை துவக்க முடியும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங்புரி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கில் அளிக்கப்பட்டுள்ள சில தளர்வுகள் காரணமாக இயல்பு வாழ்க்கை திரும்பா விட்டாலும் மக்களின் நடமாட்டம் மட்டும் அதிகரித்துள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. வெளிநாட்டில் தவித்த இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா வந்து சேர்ந்தனர்.


10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்கள்


இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் சார்பில் அதிகாரிகள் கூறுகையில்; சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 35 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்தஊர் திரும்பியுள்ளனர் . இன்னும் இன்னும் 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம். மாநில அரசு கேட்டு கொண்டால் மட்டும் செயல்படுத்த முடியும். ஊரடங்கிற்கு முன் வசூலித்த கட்டணமே வசூலிக்கப்படும். மேலும் வயது மூத்த நபர்களுக் கட்டணத்தில் எவ்வித சலுகையும் வழங்க முடியாது. இதன் மூலம் வயதானவர்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்தலாம் . இவ்வாறு கூறினர்.

மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங்புரி ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: சர்வதேச விமானங்கள் இயக்க ஏன் அவசரப்பட வேண்டும் ? ஆகஸ்ட், செப்டம்பர் வரை பொறுக்கலாமே. தேவை அடிப்படையில் வரும் ஜூன் மாதம் 15ம் நாட்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X