இனப்பாகுபாடு சர்ச்சை; ஜோ பிடேனை கடுப்பேற்றிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்| Biden apologizes for saying voters who back Trump 'ain't black' | Dinamalar

இனப்பாகுபாடு சர்ச்சை; ஜோ பிடேனை கடுப்பேற்றிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (4)
Share
வாஷிங்டன்: கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க ஜனநாயக கட்சி செயல்படுவதாகவும், டிரம்ப் இனப்பாகுபாடு காட்டுவதாகவும் ஜனநாயக கட்சியினர் வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். டிரம்ப் இனவெறி பிடித்தவர் எனவும், ஆஃப்ரோ அமெரிக்கர்களை அவர் ஒடுக்குவதாகவும் அமெரிக்க மீடியாக்கள் அவ்வப்போது செய்தி வெளியிடும். ஜனநாயக கட்சி தன்வசம்
Biden, America, Media, Black Media, White Media, Trump,  US, Donald Trump, African Americans, US Black Chamber of Commerce, controversy, பிடேன், அமெரிக்கா, தேர்தல், மீடியா, தொகுப்பாளர், டிரம்ப்

வாஷிங்டன்: கருப்பினத்தவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க ஜனநாயக கட்சி செயல்படுவதாகவும், டிரம்ப் இனப்பாகுபாடு காட்டுவதாகவும் ஜனநாயக கட்சியினர் வரவிருக்கும் அமெரிக்கத் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

டிரம்ப் இனவெறி பிடித்தவர் எனவும், ஆஃப்ரோ அமெரிக்கர்களை அவர் ஒடுக்குவதாகவும் அமெரிக்க மீடியாக்கள் அவ்வப்போது செய்தி வெளியிடும். ஜனநாயக கட்சி தன்வசம் அமெரிக்க மீடியாக்களை வைத்துக்கொண்டு பத்திரிகையாளர் சந்திபின்போது சர்ச்சைக்குரிய கேள்விகளை கேட்டு வருவதாக டிரம்ப் அவ்வப்போது குற்றஞ்சாட்டுவார்.


latest tamil news
இதனைத்தொடர்ந்து தற்போது ‛தி பிரேக்பாஸ்ட் கிளப்' என்கிற தொலைக்காட்சி நேர்காணலில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடேன் பேட்டி ஒன்றை அளித்தார். அமெரிக்காவில் மீடியாக்களில் கருப்பர்களை ஆதரிக்கும் மீடியா (பிளாக் மீடியா), வெள்ளையர்களை ஆதரிக்கும் மீடியா (ஒயிட் மீடியா) என இரு வகை மீடியாக்கள் உள்ளன.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் சார்லமேன், பிடேன் அமெரிக்க கருப்பின மக்களின் வாக்குகளைப் பெற அவர் சில தந்திர வேலைகள் செய்தாக கூறும் வகையில் கேள்வி எழுப்பினார். இதனால் கடுப்பாகிய பிடேன் தனக்கு பிளாக் மீடியா, ஒயிட் மீடியா பற்றி எல்லாம் கவலை இல்லை எனவும் தான் நடுநிலையானவன் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X