பொது செய்தி

இந்தியா

10 நாளில் 2,600 சிறப்பு ரயில்: ரயில்வே முடிவு

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020
Share
Advertisement
புதுடில்லி: அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் கூறியுள்ளார்.டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் இதுவரை 35 லட்சம் பேர் பயணித்துள்ளனர். உ.பி., மற்றும் பீஹார் மாநிலத்தை சேர்ந்த 80 சதவீதம் பேர் பயணம் செய்துள்ளனர்.'ஷ்ராமிக் சிறப்பு ரயில்'
சிறப்புரயில், புலம்பெயர்தொழிலாளர், ரயில்வேவாரியம், Indian Railways, Railways, Shramik Special trains, migrant labourers, train service, IRCTC, Covid-19 care centres, Vinod Kumar Yadav, Chairman of Railway Board

புதுடில்லி: அடுத்த 10 நாட்களில் 2,600 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வினோத்குமார் கூறியுள்ளார்.

டில்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் இதுவரை 35 லட்சம் பேர் பயணித்துள்ளனர். உ.பி., மற்றும் பீஹார் மாநிலத்தை சேர்ந்த 80 சதவீதம் பேர் பயணம் செய்துள்ளனர்.'ஷ்ராமிக் சிறப்பு ரயில்' சேவை மே 1 ல் துவங்கியது. இதில், பயணிகளுக்கு இலவச உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில், சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. சுத்தமாக வைக்கப்பட்டது.


சிறப்பு மருத்துவமனை


80 ஆயிரம் படுக்கைகளுடன், 5 ஆயிரம் ரயில் பெட்டிகளை கோவிட் சிறப்பு மருத்துவமனைகளாக மாற்றப்பட்டுள்ளது. ரயில்வே தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட 1.2 லட்சம் தனிநபர் பாதுகாப்பு கவசம் மற்றும் 1.4 லட்சம் லிட்டர் சானிடைசர்களை அரசிடம் வழங்கியுள்ளோம். தினமும் 4 ஆயிரம் பிபிஇ கிட்ஸ்கள் உற்பத்தி செய்யப்பட்டது.


சிறப்பு ரயில்


நாட்டில் இயல்பு சூழ்நிலையை கொண்டு வரும் வகையில், ஜூன் 1 முதல் ரயில்வே அமைச்சகம் 200 எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க உள்ளது. ஷ்ரமிக் சிறப்பு ரயிலில் தினமும் பயணித்தவர்களின் விவரம் வெளியிட்டுள்ளோம். கடந்த மே 12 முதல் டில்லியில் இருந்து 15 பெரிய நகரங்களுக்கு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது.அடுத்த 10 நாட்களில் 2600 சிறப்பு ரயில்கள் இயக்க திட்டமிட்டுள்ளோம்.
அவற்றின் விவரம்


latest tamil news
சலுகை கிடையாது


ஊரடங்கிற்கு முன் வசூலித்த கட்டணமே வசூலிக்கப்படும். மேலும் வயது மூத்த நபர்களுக் கட்டணத்தில் எவ்வித சலுகையும் வழங்க முடியாது. இதன் மூலம் வயதானவர்கள் வெளியே வருவதை கட்டுப்படுத்தலாம்.


பார்சல் ரயில்


ரயில்கள் இயக்க வேண்டும் என எந்த மாநில அரசு கோரிக்கை விடுத்தாலும், அங்கும் ரயில்களை இயக்க தயாராக உள்ளோம்.சரக்கு ரயில் போக்குவரத்து தடையின்றி இயங்கின. ஏப்.,1 முதல் மே 22 வரை 97 லட்சம் டன் உணவு தானியங்கள் கொண்டு சேர்த்துள்ளோம். மார்ச் 22 முதல் சிறப்பு பார்சல் ரயில்கள் இயக்கப்பட்டன.


மே.வங்கத்திற்கு ரயில்


புயல் என்பது இயற்கை ஏற்படுத்திய பாதிப்பு. மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால், ரயில்கள் இயக்க வேண்டாம் என மே.வங்க தலைமை செயலாளர், எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். எப்போது ரயில் சேவை துவக்க வேண்டும் என்பது குறித்து அம்மாநில அரசு தெரிவிக்கும். அங்கிருந்து ஒப்புதல் கிடைத்த உடன் மேற்கு வங்கத்திற்கு ரயில் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X