பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 15 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு; பலி 100ஐ தாண்டியது

Updated : மே 24, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Tamilnadu, CoronaCases, DeathToll, Discharge, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, பலி, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 23) ஒரே நாளில் 759 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 5 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பாதிப்பு 15,512 ஆகவும், பலி எண்ணிக்கை 103 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 759 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், மஹாராஷ்டிரா - 24 பேர், ராஜஸ்தான் - 6 பேர், மேற்குவங்கம் -3 பேர், டில்லி, தெலுங்கானா, உ.பி., ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவர், பிலிப்பைன்சில் இருந்து வந்தவர்கள் 5 பேர், லண்டனில் இருந்து வந்தவர்கள் 7 பேர் அடங்கும். தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 5 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news


ஒரே நாளில் 363 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 7,491 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 7,915 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் மொத்தமுள்ள 68 பரிசோதனை மையங்கள் மூலமாக 12,155 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 948 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 13,286 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 1,278 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Perumal - Chennai,இந்தியா
24-மே-202016:08:10 IST Report Abuse
Perumal Already lockdown is lifted and eased out in many places. Don't expect to sleep in home till September.
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
24-மே-202014:09:49 IST Report Abuse
K.Sugavanam கொரோனாவை அவுத்து விட்டாச்சு.தானே அடங்கிடும் என அரசுகள் எண்ணுகின்ற போலும்..போயி பத்திரமா இருங்க..
Rate this:
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
24-மே-202012:24:26 IST Report Abuse
Panneerselvam Chinnasamy கொரானாவிற்கு எதிரான யுத்தம் பல மாதங்கள் நீடிக்கும்.அரசு எந்திரம் எளிதில் வெற்றிபெறலாம் என்று நினைக்கக்கூடாது. தொடர்ந்து தோற்று தொடராவண்ணம் தனிமைப்படுத்துதல்தான் ஒரே வழி. மருத்துவர்கள் பெரிய யுத்தத்திற்கு தயாராகும் வண்ணம் அவர்களுக்கு மனநல ஆலோசனை தராவிட்டால் சலிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இத்தாலி அமெரிக்க ஜனத்தொகையோடு இந்தியா ஜனத்தொகையை ஒப்பிட்டால் உள்ள அபாயம் புரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X