ஜூன் 12 -ல் மேட்டூர் அணை திறப்பு: தமிழக அரசு | Mettur dam to be opened on June 12: Govt | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் 12 -ல் மேட்டூர் அணை திறப்பு: தமிழக அரசு

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020
Share

சென்னை: வரும் ஜூன் மாதம் 12 ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.



latest tamil news



ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம் 12ம் தேதி காவிரிடெல்டா பாசனத்திற்கு நீர் திறந்து விடப்படும். தற்போதைய சூழ்நிலையில் அணையின் நீர் மட்டம் 100 அடிக்கும் குறையாமல் இருப்பதால் வழக்கம் போல் இந்தாண்டு ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறந்து விட அரசு முடிவெடுத்து உள்ளது.


latest tamil news



இது குறித்து வேளாண் துறை தெரிவித்து இருப்பதாவது: மேட்டூர் அணையில் 100 அடி நீர் இருப்பதால் இந்தாண்டு ஜூன் 12 ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அரசு தெரிவித்து உள்ளது. காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு லட்சத்து 8 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பயிர்களுக்கு தேவையான உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தால் கடுமயைான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண்துறை தெரிவித்து உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X