கொள்கை உருவாக்க குழுவில் 6 இந்தியர்| Dinamalar

கொள்கை உருவாக்க குழுவில் 6 இந்தியர்

Added : மே 23, 2020
Share

வாஷிங்டன்: அமெரிக்காவில், ஜனநாயக கட்சியின், அதிபர் வேட்பாளருக்கு போட்டியிடும் ஜோ பிடன், செனட்டர், பெர்னி சான்டர்ஸ் ஆதரவாளர்களுடன் இணைந்து, ஒற்றுமை செயல் திட்டக் குழுவை உருவாக்கியுள்ளார். இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, பிரமீளா ஜெயபால், விவேக் மூர்த்தி, வர்ஷினி பிரகாஷ், வனிதா குப்தா, சோனால் ஷா, சிராக் பெய்ன்ஸ் ஆகிய, ஆறு வல்லுனர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு, சுகாதாரம், பருவ நிலை மாற்றம், பொருளாதாரம், சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில், கொள்கைகளை உருவாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X