பொது செய்தி

தமிழ்நாடு

152 ஆண்டுகளாக செயல்படும் வடலூர் அணையா அடுப்பு திட்டம்

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் வடலூர் சத்திய தரும சாலையில் ஆன்மீகவாதி வள்ளலார் தொடங்கிய அணையா அடுப்பு திட்டத்தின் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் உணவருந்தி வருகின்றனர். இந்த திட்டம் கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் பயனுடையதாக இருப்பது இன்னும் சிறப்பு பெறுகிறது.கடலுார் மாவட்டம் வடலூரில் உள்ள தரும சாலைக்கு வரும் நபர்களுக்கு மூன்று வேளையும்

150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் வடலூர் சத்திய தரும சாலையில் ஆன்மீகவாதி வள்ளலார் தொடங்கிய அணையா அடுப்பு திட்டத்தின் மூலம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் உணவருந்தி வருகின்றனர். இந்த திட்டம் கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் பயனுடையதாக இருப்பது இன்னும் சிறப்பு பெறுகிறது.latest tamil newsகடலுார் மாவட்டம் வடலூரில் உள்ள தரும சாலைக்கு வரும் நபர்களுக்கு மூன்று வேளையும் உணவு கிடைக்கும் எனக்கூறி 1867ல் மார்ச் 23ம் தேதி வள்ளலார் ஏற்றிய அடுப்பு, தொடர்ந்து செயல்படுகிறது.
தினமும் 600 பேர் உணவருந்தி வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக ஹோட்டல்கள் மூடப்பட்டதால், பலரும் சத்திய தரும சாலையில் தங்கியுள்ளனர் என தருமசாலை நிர்வாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


latest tamil newsஇது குறித்து தருமசாலை நிர்வாக அதிகாரி சரவணன் கூறியதாவது: ''அன்னதானம் பல கோயில்களில் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வள்ளலார் தொடங்கிய இந்த தரும சாலையில், தினமும் உணவு வழங்கப்படுகிறது. பசியோடு வருபவர்களுக்கு உணவு வழங்கவேண்டும் என்பது வள்ளலாரின் முக்கிய நோக்கம் என்பதால் தொடர்ந்து செயல்படுகிறோம். சமூக இடைவெளியைப் பின்பற்றுகிறோம். இங்குள்ளவர்களை முகக்கவசம் அணியச்சொல்கிறோம். இங்கு தங்கி சாப்பிடும் நபர்களுக்கு புதிதாக தட்டு வழங்கியுள்ளோம்,'' இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek c mani - Mumbai,இந்தியா
25-மே-202023:20:42 IST Report Abuse
vivek c mani வள்ளலார் வள்ளல் தன்மை இன்றும் நிலைநின்று தேவையுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பது ,ஹிந்து மதத்தின் தர்மசிந்தனையின் ஒரு முக்கிய அங்கம். வளர்க தர்மம் , வாழ்க தர்ம சிந்தனை .
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் நடந்து நடந்து காலுஞ்சோர்ந்தது கேட்டு கேட்டு வாயுஞ்சோர்ந்தது நினைத்து நினைத்து மனமுஞ் சோர்ந்தது இனி இப்பாவி வயிற்றுக்கு என்ன செய்வோம்? என்றெண்ணி கண்ணீர் வடிக்கின்ற ஏழைகளுக்கு ஆகாரங்கொடுத்து கண்ணீரை மாற்றுவதே - சீவகாருண்யம் - அருட்ப்ரகாச வள்ளலார்.
Rate this:
Cancel
baala - coimbatore,இந்தியா
25-மே-202016:58:07 IST Report Abuse
baala இந்த மாதிரியா செயல் மக்களுக்கு எவ்வளவு நன்மையாந செயல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X