நிதி நெருக்கடி:ஐ.பி.எம்.மில் ஆயிரம் பேர் பணி நீக்கம்| IBM lays off 'thousands' of employees as Covid-19 hits business | Dinamalar

நிதி நெருக்கடி:ஐ.பி.எம்.மில் ஆயிரம் பேர் பணி நீக்கம்

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
நியூயார்க்: பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக செலவை குறைக்கும் வகையில் ஐ.பி.எம்., நிறுவனம் ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளன., வல்லரசு நாடான அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்கள் செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்துவருகின்றன. இதனிடையே ஐ.டி.,

நியூயார்க்: பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக செலவை குறைக்கும் வகையில் ஐ.பி.எம்., நிறுவனம் ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளது.



latest tamil news



கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் பொருளாதார சிக்கலில் சிக்கி உள்ளன., வல்லரசு நாடான அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்கள் செலவுகளை கட்டுப்படுத்தும் விதமாக ஊழியர்களை பணி நீக்கம் செய்துவருகின்றன.

இதனிடையே ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றான ஐ.பி.எம்., நிறுவனமும் ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருப்பதாவது: போட்டி நிறைந்த சந்தையில் நிறுவனத்தை தக்கவைத்து கொள்ளவும், பொருளாதார சிக்கன நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டி உள்ளது. இதன் காரணமாக பென்சில்வேனியா, கலிபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றார்.


latest tamil news



மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பணி நீக்கம் இருக்கும் எனவும் நிறுவனம் தெரிவித்து உள்ளது. இருப்பினும் எத்தனை பேர் நீக்கப்படுவர் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X