திருப்பதி : காணிக்கை சொத்துக்களை விற்க தேவஸ்தானம் முடிவு| TTD decides to sell gifts offered by devotees | Dinamalar

பொது செய்தி

இந்தியா

திருப்பதி : காணிக்கை சொத்துக்களை விற்க தேவஸ்தானம் முடிவு

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (10)
Share
திருப்பதி: திருப்பதிகோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக மற்றும் காணிக்கையாக அளித்துள்ள சொத்துக்களை விற்பது என தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் காணிக்கையாக, நன்கொடையாக சொத்துக்களை திருப்பதி கோவிலுக்கு அளித்து வருவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் திருமலை திருப்பதி

திருப்பதி: திருப்பதிகோவிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக மற்றும் காணிக்கையாக அளித்துள்ள சொத்துக்களை விற்பது என தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் காணிக்கையாக, நன்கொடையாக சொத்துக்களை திருப்பதி கோவிலுக்கு அளித்து வருவது வழக்கமான ஒன்றாகும். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் நிர்வாக குழு பக்தர்கள் காணிக்கையாக அளித்து தமிழகத்தில் 23 இடங்களில் உள்ள சொத்துக்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்து அதற்கான குழு ஒன்றையும் அமைத்து உள்ளது.

இதனிடையே பக்தர்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்வதற்கான இணைய தள முகவரியையும் மாற்றி உள்ளது. இதன்படி http:/ ttdsevaonline.com என்ற முகவரி தற்போதுhttp:/ tirupatibalaji.ap.gov.in என்று மாற்றப்பட்டு உள்ளது.



latest tamil news


இது குறித்து எதிர்கட்சியான ஜனசேனா, அரசு திருப்பதி கோவிலை தனது கட்டடுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டி உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X